ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றனர். அந்த நாடுகளில் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள இவர்கள் தங்களது ஆயுத பலத்தையும் அபிவிருத்தி செய்து வருகிறார்கள்.
பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தக்கூடிய வல்லமையை அவர்கள் பெற்று இருப்பதை காட்டும் ஒரு காட்சி வெளியாகி சர்வதேச அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
அந்த காட்சி, சிரியாவில் ராக்கா நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் தளத்தில், ராணுவம் கைவிட்ட ஏவுகணைகளில் பொருத்தி பயன்படுத்தத்தக்க வெப்ப பேட்டரியை ஐ.எஸ். தீவிரவாத இயக்க விஞ்ஞானிகளும், ஆயுத நிபுணர்களும் உருவாக்கி இருப்பதை காட்டுகிறது.
எனவே இந்த பேட்டரியை ஏவுகணையில் பொருத்தி, பயணிகள் விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் குறிவைத்து வீழ்த்த முடியும் என ஆயுத வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கைவிடப்பட்ட ஏவுகணைகளை தீவிரவாத இயக்கங்கள் கைப்பற்றி வைத்திருப்பது ஒன்றும் புதிதல்ல என்றும் தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment