புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 30 December 2015

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு

புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு அறிவுறுத்தல்களை காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.

பொழுதுபோக்கு இடங்களில் புத்தாண்டு கொண்டாட மாலை 6 மணி முதல் 1 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவு மற்றும் மதுபான விற்பனையை நள்ளிரவு 1 மணியுடன் நிறுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீச்சல் குளத்தின் மீதோ, அருகிலோ தற்காலிக மேடைகள் அமைக்கக் கூடாது எனவும், தற்காலிக மேடைகளின் உறுதி தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதே போல், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் மக்கள் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது, கடல் நீர் அருகே செல்வது, கேலி செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட கூடாது என காவல்துறை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவர் மீதும், காவல்துறையின் அறிவுறுத்தல்களை மீறுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages