ஜல்லிக்கட்டு அறிவிப்பு வருமா? - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 4 January 2016

ஜல்லிக்கட்டு அறிவிப்பு வருமா?

திருப்புத்தூர்: பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கும் என நம்புகிறேன் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பொங்கலில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள், ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்திய வண்ணம் உள்ளனர். ஜல்லிக்கட்டு தொடர்பாக முடிவெடுக்க , அதன் மீதான கோர்ட் தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிராணிகள் நல அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு காட்டி வருவதால் இதில் முடிவெடுப்பதில் இழுபறி நீடிக்கிறது. மத்திய  அரசு இதுதொடர்பாக மறுபரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. மத்திய அரசு மீது ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள் பெரும் நம்பிக்ைக வைத்துள்ளனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
 ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு ஒரு முழுமையான தீர்வு காண முடியும் என்று  நம்புகிறோம். ஆனால், ஜல்லிக்கட்டின் நோக்கத்தை தவறாக புரிந்து கொண்டு, சிலர் அதை நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்தப்படும்போது எவ்வித தடைக்கும் ஆளாகாமல் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது விருப்பம். அதன் அடிப்படையிலேயே நாங்கள் அதற்கான வேலைகளை செய்து வருகிறோம். கூடிய விரைவில் நிச்சயமாக நல்ல செய்தி வரும் என நம்புகிறோம். ஜல்லிக்கட்டுக்கு சிலர் சட்ட சிக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.  எந்த ரூபத்திலாவது, வரும் பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மறியல்: ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி திருச்சி அருகே 3 கிராம மக்கள் நேற்று காளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  திருச்சி அருகே உள்ள உத்தமர்சீலி, பனையபுரம், கவுத்தரசநல்லூர் ஆகிய கிராம மக்கள் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக காலை 10 மணியளவில் 10 காளை மாடுகளுடன் உத்தமர்சீலியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். பின்னர், திருவானைக்காவல்-கல்லணை சாலையில் காளை மாடுகளுடன் மறியல் செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages