முள் படுக்கையில் படுத்து குறி சொன்ன பெண் சாமியார் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 4 January 2016

முள் படுக்கையில் படுத்து குறி சொன்ன பெண் சாமியார்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று முள் படுக்கையில் படுத்தவாறே  பெண் சாமியார் குறி சொன்னார். இதை பார்த்த பக்தர்கள் அருள் வந்து ஆடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. தமிழகத்திலேயே மிகவும் பெரிய மாசாணியம்மன் சிலை இங்குள்ளது. இங்கு அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். இவ்வூரை சேர்ந்த நாகராணி  என்ற பெண் சாமியார் வழக்கமாக முள் படுக்கையில் அமர்ந்தவாறும், படுத்தவாறும், ஆடியவாறும் குறி சொல்வது வழக்கம். மார்கழி 18ம் தேதி அருள்வாக்கு வைபவத்திற்காக நாகராணி கடந்த 41 நாட்களாக விரதமிருந்து வந்தார்.

நேற்று 41வது நாள் அதிகாலையில் இருந்தே மாசாணியம்மனுக்கும், முத்துமாரியம்மனுக்கும் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடந்தது.  காலை 11 மணியளவில் நாகராணி கருவேல முள், காட்டு கருவேல முள், கள்ளி முள், இலந்தை செடி முள் உள்ளிட்ட முள் வகைகளால் அமைத்த முள்படுக்கையில் ஏறி நின்று சாமியாடினார். பின் முள் படுக்கையில் படுத்தவாறு குறி சொன்னார். மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள்  குறி கேட்க வந்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages