டி.கல்லுப்பட்டி அருகே அரசு பஸ் மோதி 30 ஆடுகள் பலி - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 4 January 2016

டி.கல்லுப்பட்டி அருகே அரசு பஸ் மோதி 30 ஆடுகள் பலி

திருமங்கலம்: டி.கல்லுப்பட்டி அருகே அரசு பஸ் மோதி 30 ஆடுகள் பலியாகின.மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள காடனேரியைச் சேர்ந்தவர் வீரபாண்டி (45). இவரும் இதே ஊரைச் சேர்ந்த சுதாகரும் இணைந்து ஆடுகளை வளர்க்கின்றனர். இவர்களிடம் தற்போது 300க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. இருவரும் தினசரி ஆடுகளை காடனேரி அருகேயுள்ள காடுகளில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.இந்நிைலயில் நேற்று வீரபாண்டி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு மாலையில் மீண்டும் காடனேரிக்கு திரும்பி வந்தார். மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் காடனேரி விலக்கு அருகே ஆடுகளுடன் வீரபாண்டி வரும்போது நெல்லை மாவட்டம் சங்கரன்கோயிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென சாலையோரத்தில் சென்ற ஆடுகள் மீது மோதியது.


இந்த விபத்தில் 30 ஆடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன. இவற்றில் சில சினை ஆடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடுகின்றன. ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற வீரபாண்டியும் காயமடைந்தார்.டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடம் சென்று வீரபாண்டியை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages