ராட்சத பலூனில் பறந்து அஞ்சலக ஊழியர்கள் சாகசம் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 4 January 2016

ராட்சத பலூனில் பறந்து அஞ்சலக ஊழியர்கள் சாகசம்

பொள்ளாச்சி: இந்திய  தபால்துறையின் 161வது ஆண்டுவிழாவையொட்டி, பொள்ளாச்சி கோட்ட தலைமை  தபால்துறை மற்றும் குளோபல் மீடியா இணைந்து, பொதுமக்களிடையே தபால் தலை  சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நேற்று ராட்சத  பலூனில் அஞ்சல் ஊழியர்கள் தபால் தலைகளுடன் பறந்து சாகசம் நிகழ்த்தினர். பொள்ளாச்சி- கோவை ரோட்டில் உள்ள சக்திமில்  வளாகத்தில் நேற்று காலை சுமார் 6.30 மணிக்கு ராட்சத பலூனிற்குள் வெப்பக்  காற்று செலுத்தப்பட்டு பறக்கவிடப்பட்டது. இந்த பலூனில் தென்னிந்திய தபால் தலை சேகரிப்பு பொருளாளர் பாஸ்கர், மாநில  தபால் தலை சேகரிப்பு பிரிவு அலுவலர் சுந்தரேஸ்வரன், பலூன் இயக்குனர்  கேரிமோர் ஆகியோர் சுமார் 1000 தபால்  தலைகளுடன் பயணித்தனர்.சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 10  கி.மீ தூரம் கடந்து  கோவில்பாளையத்தில் உள்ள மைதானத்தை வந்தடைந்தது.  


பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டு  செல்லப்பட்டது.சுமார் 15மீட்டர் உயரத்தில் பறந்து சென்ற ராட்சத பலூனை  வழிநெடுக சென்ற பொதுமக்கள் கண்டு ரசித்தனர். பின்னர் பொள்ளாச்சி  தொழில் வர்த்தகசபை கூட்ட அரங்கில், தபால் தலை சேகரிப்பு குறித்த  விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கோவை மேற்கு மண்டல தபால்துறை  தலைவர் மஞ்சுபிள்ளை, 161வது ஆண்டு விழாவிற்கான தபால் தலைகளை வெளியிட்டார்.இந்நிகழ்ச்சியில் பாரதிய  வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், தொழில் வர்த்தகசபை தலைவர்  கோபாலகிருஷ்ணன், பொள்ளாச்சி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் சகாயராஜ்,  அலுவலர் ஜவகர், குளோபல் மீடியா தலைவர் பெனடிக்சேவியோ ஆகியோர் கலந்து  கொண்டனர். விழாவையொட்டி தபால் தலை கண்காட்சி நடந்தது.


இதில் பழமையான  தபால் தலைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. தபால்துறை  அதிகாரிகள் கூறுகையில், ‘இந்திய தபால்துறையின் 161ஆண்டையொட்டி, தபால்தலை  சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த,  இந்தியாவில் டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத பலூன்  பறக்கவிடப்பட்டது. மூன்றாவது முறையாக, தமிழகத்தில் முதன்முறையாக  பொள்ளாச்சியில் இந்த ராட்சத பலூன் பறக்கவிட்டு பொதுமக்களிடையே தபால்தலை  சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது’  என்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages