தமிழக அரசு சார்பில் சபரிமலையில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 24 November 2015

தமிழக அரசு சார்பில் சபரிமலையில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

தமிழக அரசு சார்பில் சபரிமலையில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
சென்னை, நவ. 25–
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆனால், சபரிமலை புனிதப் பயணத்தின் போது அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் கணக்கில் அடங்காதவை.
சபரிமலை பயணம் சுகமான அனுபவமாக மாற்ற சில திட்டங்களைத் தயாரித்துள்ள கேரளம் அதற்கு தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய அரசுகளின் ஒத்துழைப்பைக் கோரியிருக்கிறது.
சபரிமலைக்கு செல்லும் வழியில் நிலக்கல் என்ற இடத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய அனைத்து மாநிலங்களுக்கும் தலா 5 ஏக்கர் நிலத்தை கேரள அரசு ஒதுக்கியிருக்கிறது. ஒவ்வொரு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் மாநில அரசுகள் சமுதாயக் கூடங்களை கட்டினால், அவற்றில் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்ல முடியும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
தமிழக அரசு கேரள அரசால் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை பெற்றுக் கொண்டு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களுக்காக சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages