அமெரிக்காவில் வெடி குண்டு வைக்க சதி: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனுக்கு 40 ஆண்டு ஜெயில் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 24 November 2015

அமெரிக்காவில் வெடி குண்டு வைக்க சதி: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனுக்கு 40 ஆண்டு ஜெயில்

அமெரிக்காவில் வெடி குண்டு வைக்க சதி: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனுக்கு 40 ஆண்டு ஜெயில்
நியூயார்க், நவ. 25–
அமெரிக்காவில் வெடிகுண்டு வைக்க சதி செய்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனுக்கு 40 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தானை சேர்ந்தவர் அபித் நசீர் (29). இவர் பாகிஸ்தானில் பள்ளி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார். இவரை கடந்த 2009–ம் ஆண்டு இங்கிலாந்து போலீசார் கைது செய்தனர்.
மான் செஸ்டர் நகரில் ஒரு வணிக வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து 2013–ம் ஆண்டு இவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அமெரிக்காவில் பிரிட்டன் வணிக மையத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் வெடிகுண்டு வைக்க சதி திட்டம் தீட்டினர். அதில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இவர் தேடப்பட்டு வந்தார்.
இதற்கிடையே அமெரிக்கா கடத்தப்பட்ட இவர் மீது புரூக்ளின் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரேமண்ட் டெயரி, இவரை ஒரு தீவிரவாதி என்றார். அதற்கான ஆதாரம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, நசீருக்கு 40 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages