நியூயார்க், நவ. 25-
உலகம் முழுவதும் உள்ள புதிர் போட்டி விரும்பிகளால் அதிகமாக விளையாடப்படும் ‘ரூபிக்ஸ் க்யூப்’, ஏர்னோ ரூபிக் என்ற ஹங்கேரிய சிற்பி மற்றும் கட்டிடக்கலைப் பேராசிரியரால் கடந்த 1974-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்த ரூபிக்கின் கனசதுர புதிருக்கு மிக விரைவாக தீர்வு காண்பதில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லூகாஸ் எட்டர்(14) புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளான்.
லூகாஸ் வெறும் 4.9 வினாடிகளில் ரூபிக்கின் கனசதுர புதிருக்கு தீர்வுகண்டு காலின் பர்ன்ஸ் என்பவர் 5.25 வினாடிகளில் நிகழ்த்திய முந்தைய சாதனையை முறியடித்துள்ளான்.
இந்தப் போட்டித் தொடங்குவதற்கு முன்னர் பதினைந்து வினாடிகள் ரூபிக்கின் கனசதுரத்தை கவனிக்க போட்டியாளர்களுக்கு நேரம் வழங்கப்பட்டது. உலகிலேயே முதன்முறையாக ஐந்து வினாடிகளுக்குள் இந்தப் புதிருக்கான தீர்வைக்கண்ட லூகாஸ் எட்டரின் சாதனை வினாடியின் வீடியோப்பதிவை கண்டு மகிழவும்..,
No comments:
Post a Comment