மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 6 January 2016

மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை

புதுடில்லி: நலிவடைந்த, எச்.எம்.டி., வாட்சஸ் உட்பட, மூன்று பொதுத்துறை நிறுவனங்களை மூட, டில்லியில், பிரதமர் மோடி தலைமையில், நடைபெற்ற, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பெங்களூரில் உள்ள, எச்.எம்.டி., வாட்சஸ், ஜம்முவில் உள்ள எச்.எம்.டி., சினார் வாட்சஸ், ஐதராபாத்தை சேர்ந்த, எச்.எம்.டி., பியரிங்ஸ் என, மூன்று நிறுவனங்கள் மூடப்பட உள்ளன. இந்நிறுவனங்களைச் சேர்ந்த, 1,000 தொழிலாளர்கள், 2007ம் ஆண்டு ஊதிய விகிதத்தின் கீழ், தங்களது விருப்ப ஓய்வூதிய திட்ட சலுகைகளை பெறுவர். இதற்காக, மத்திய அரசு, 427 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும்.

கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியர்களின் பெருமை மிகு அடையாளமாக, எச்.எம்.டி., கைக்கடிகாரங்கள் திகழ்ந்து வந்தன. ஜப்பானைச் சேர்ந்த, சிட்டிசன் வாட்ச் நிறுவனத்தின் கூட்டுடன், பெங்களூருவில், எச்.எம்.டி., வாட்ச் நிறுவனம், 1961ல் துவக்கப்பட்டது.உள்நாட்டில், முதன் முதலாக இத்தொழிற்சாலையில் தான், கைக்கடிகாரம் தயாரிக்கப்பட்டது. முதல் கடிகாரத்தை, அப்போதைய பிரதமர் நேரு வெளியிட்டார். இதுவரை, 10 கோடிக்கும் அதிகமான கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எச்.எம்.டி., சினார் வாட்ச் நிறுவனம், 'குவார்ட்ஸ்' கைக்கடிகாரங்களையும், எச்.எம்.டி., பியரிங்ஸ் நிறுவனம், மோட்டார்களுக்கான, 'பால் பியரிங்கு'களையும் தயாரித்து வந்தன. நலிவடைந்த இந்த மூன்று நிறுவனங்களையும் மூட, 2014 செப்டம்பரில், மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு, முறைப்படி ஒப்புதல் கிடைத்துள்ளது.அந்தஸ்தின் அடையாளமாக திகழ்ந்து வந்த, எச்.எம்.டி., கடிகாரம், இனி, நினைவுச் சின்னமாக மாற இருப்பது, குறிப்பாக, மூத்த குடிமக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages