டில்லி அதிகாரி வீட்டில் வெளிநாட்டு மது ; கோடிக்கணக்கில் வங்கியில் பணம் டிபாசிட்
புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் முதன்மை செயலர் வீட்டில் இருந்து வங்கி சேமிப்பு கணக்கில் ரூ.28 லட்சம் , 1.66 கோடி பிக்ஸட் டிபாசிட் செய்துள்ள ஆவணங்கள், 6 பென் டிரைவ், ஒரு லேப்டாப், ஒரு மொபைல் போன் , 17 வெளிநாட்டு வகை மது பாட்டல்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன .2வது நாளாக சி.பி.ஐ., விசாரணை:
பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் முதன்மை செயலர் ராஜேந்திரகுமாரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் 2 வது நாளாக இன்றும் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். டில்லி சி.பி.ஐ., அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் கேள்வி கேட்டு வருகின்றனர் . தேவைப்படும் பட்சத்தில் இவரை சி.பி.ஐ., கைது செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது .
2007 -14 ல் ராஜேந்திரகுமார் வகித்து வந்த கல்வித்துறை மற்றும் வாட் வரி விதிப்பு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது . பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டதில் சலுகைகள் காட்டியுள்ளார். இதன் மூலம் ராஜேந்திரகுமார் ஆதாயம் பெற்றுள்ளார்.
இந்த வழக்கு தற்போது தூசி தட்டப்பட்டு சிபிஐ மும்முரமாக விசாரித்தது. இதன் ஒரு பகுதியாக நேற்று கெஜ்ரிவாலின் அலுவலக 3வது மாடியில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர் . இந்த சோதனைக்கு கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார், மோடியின் கோழைத்தனம் என்றும் வர்ணித்தார். இதற்கு பதில் அளித்த பாஜ அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கெஜ்ரிவால் ஊழல் கறை படிந்த அதிகாரிக்கு ஏன் உதவிக்கரம் நீட்டுகிறார் என்று கேள்வி எழுப்பினார் .
ராஜேந்திரகுமார் வீட்டில் இருந்து வங்கியில் பணம் டிபாசிட், வெளிநாட்டு மது மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் .
No comments:
Post a Comment