தூய்மை இந்தியா திட்டத்திற்கு உலகவங்கி நிதியுதவி
இந்த திட்டத்தை மக்களிடம் சேர்க்கும் வண்ணம், கமல், அமீர் கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதில் தூதர்களாக நியமி்க்கப்பட்டனர். தூயமை இந்தியா திட்டத்தின் நடவடிக்கைகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. தூயமை இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கமே, அனைவருக்கும் சுகாதாரமான வாழ்வை அளிப்பதே ஆகும்.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சர்வதேச அளவில், 2.4 பில்லியன் மக்கள் சுகாதாரமற்ற வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 750 மி்ல்லியனுக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் வசித்து வருகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசித்துவருகின்றனர்.
500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் திறந்தவெ ளியில் தான் மலம் கழித்து வருகின்றனர். இதன்காரணமாக, அவர்களுக்கு எண்ணற்ற நோய்கள் ஏற்பட்டு அவர்கள் இளம்வயதிலேயே மரணத்திற்கு ஆட்படுகின்றனர். இந்தியாவில், பத்தில் ஒருவர், சுகாதார குறைவினால் மரணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுமக்களுக்கு சுகாதார வசதிகள் முழுமையாக கிடைக்கும் பொருட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக, 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
No comments:
Post a Comment