அமெரிக்கர்களை பயமுறுத்த அனுமதிக்க மாட்டேன்: ஒபாமா உறுதி கருத்துகள் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

அமெரிக்கர்களை பயமுறுத்த அனுமதிக்க மாட்டேன்: ஒபாமா உறுதி கருத்துகள்


வாஷிங்டன்,


அமெரிக்காவையும் அதன் குடிமக்களையும் பயமுறுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பள்ளிகளுக்கு தீவிரவாத மிரட்டல் விடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் ஒபாமாவின் இந்த அறிவிப்பு வெளியாகியது.


அமெரிக்காவையும் அதன் குடிமக்களையும் அச்சுறுத்துவதை அனுமதிக்க முடியாது என்பதை அதிபர் ஒபமா உறுதி பட தெரிவித்தார். இதற்கான பல அம்சங்களை அதிபர் செய்து வருகிறார்” என்று வெள்ளை மாளிகை ஊடக செயலர் ஜோஷ் எர்னஸ்ட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையின் போது தெரிவித்தார். 


முன்னதாக நேற்று, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று மின்னணு முறையில் (குறுந்தகவல்) தீவிரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள படித்துவரும் 6,60000 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதேபோன்ற அச்சுறுத்தல் நீயூயார்க்கில் உள்ள பள்ளிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அப்பகுதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன. மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages