நடிப்புக்கு இடைவெளி கொடுக்கும் சன்னி லியோன்
2012ல் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் சன்னி லியோன். தனது கவர்ச்சியால் படத்துக்குப்படம் ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்து வரும் அவர், அயிட்டம் நடிகைகளையெல்லாம் ஓரங்கட்டி விட்டார். அதோடு பாலிவுட்டின் மேல்தட்டு நடிகைகளே கவர்ச்சி விசயத்தில் சன்னியுடன் மோத முடியாது என்று ஒதுங்கி நின்று பர்பாமென்ஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு சில படங்களில் நிர்வாணமாக நடித்தும் கதிகலங்க வைத்தார் அவர். பின்னர், தென்னிந்திய சினிமாவையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வரவேண்டும் என்று தமிழில் வடகறி படத்தில் நடித்தவர், சில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். ஆனால் அந்த படங்கள் சன்னிலியோனுக்கு பெரிய திருப்பத்தைக் கொடுக்கவில்லை. அதனால் மறுபடியும் இந்தியில் கவனம் செலுத்தத் தொடங்கி தற்போது பல படங்களில் பரவலாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ஏற்கனவே திருமணமாகி விட்ட சன்னி லியோன், ஐஸ்வர்யாராய் பாணியில் அடுத்தபடியாக வாரிசு பெற்றுக்கொள்வதற்காக சில ஆண்டு நடிப்புக்கு இடைவெளி கொடுக்கப்போகிறாராம். அதனால் கைவசமுள்ள படங்களைத் தொடர்ந்து புதிய படங்களுக்கான கதை கேட்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார் சன்னி லியோன்.
No comments:
Post a Comment