சிம்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: பெண்கள் குறித்து ஆபாசமாக பாடல் எழுதி, பாடிய நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, தர்மபுரி மாவட்ட அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி தலைமை வகித்தார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், ஆபாச பாடல் எழுதி, பாடிய சிம்பு, இசையமைப்பாளர் அனிருத்தை கைது செய்ய கோரி, கோஷம் எழுப்பட்டது.
No comments:
Post a Comment