நடிகர் விஷால் பங்கேற்க இருந்த நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திடீர் ரத்து; நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் கருத்துகள் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

நடிகர் விஷால் பங்கேற்க இருந்த நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திடீர் ரத்து; நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் கருத்துகள்

சென்னை,


சென்னையில் நடிகர் விஷால் பங்கேற்க இருந்த நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


நிவாரண பொருட்கள்


சென்னை தியாகராயநகரில் இயங்கி வரும் ஒரு அறக்கட்டளை சார்பில் மாம்பலம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மேற்கு மாம்பலத்தில் நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக 2 ஆயிரம் பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது.


இந்நிகழ்ச்சிக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். திடீரென இந்நிகழ்ச்சி மதியம் தள்ளிவைக்கப்பட்டது.


நிகழ்ச்சி ரத்து


இதனால் காலை முதலே நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். விஷால் வருவதில் காலதாமதம் ஏற்பட்டதால் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. நேரம் செல்ல செல்ல பிற பகுதிகளில் இருந்தும் மக்கள் அங்கு திரண்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.


இந்நிலையில் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது.


காரணம் என்ன?


இது குறித்து அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சுனிலிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘‘டோக்கன் கொடுத்தவர்களுக்கு மட்டுமே நிவாரண பொருட்கள் எங்களிடம் உள்ளது. கூட்டம் அதிகமாக இருப்பதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இன்னொரு நாள் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்’’, என்றார்.


‘நிவாரண பொருட்களை கொடுப்பதாக வரச்சொல்லி எங்களை அலைக்கழித்து விட்டார்கள், இதற்கு கொடுக்காமலேயே இருந்திருக்கலாம்’’ என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.  

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages