இன்ஜி., கல்லூரி தேர்வுதள்ளி வைக்க மறுப்பு - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

இன்ஜி., கல்லூரி தேர்வுதள்ளி வைக்க மறுப்பு

இன்ஜி., கல்லூரி தேர்வுதள்ளி வைக்க மறுப்பு

சென்னை:'வெள்ள பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதல் செமஸ்டர் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.















வெள்ள பாதிப்புக்கு உள்ளான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள், டிசம்பர், 28க்கு தள்ளிவைக்கப்பட்டன. 'மற்ற கல்லுாரிகளுக்கு ஏற்கனவே அறிவித்த தேதிகளில் தேர்வு நடைபெறும்' என, உயர் நீதிமன்றத்தில், அண்ணா பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, முதல், 'பெஞ்ச்' முன் ஆஜரான, 'அப்துல் கலாம் விஷன் இந்தியா' அறக் கட்டளை அறங்காவலர் குமார், 'பிற மாவட்டங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், முதல் செமஸ்டர் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்' என, முறையிட்டார். அண்ணா பல்லை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.எஸ்.சுந்தர், அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.அதையடுத்து, 'தமிழகம் முழுவதும் தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages