டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுமா? ” : உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுமா? ” : உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பளிக்கிறது. விதிகளை அமல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளை நீதிமன்றமும், அரசும் களைய வேண்டும் என்ற கருத்து வலுத்துள்ள நிலையில் அது பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.


காற்று மாசுபாடு, மாசு நிறைந்த நகரம், வாழத்தகுதியற்ற நகரம் இப்படி எது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டாலும், இந்திய அளவில் டெல்லி இல்லாத அறிக்கையே ஆச்சரியம். அந்த அளவுக்கு டெல்லியின் காற்று மாசுபாடு அதிகரித்ததே இதற்கு காரணம். நாடாளுமன்றத்தில் மத்திய அரசும் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக கவலை தெரிவிக்கிறது.



இந்நிலையில்தான் நீதிமன்றம், மத்திய மாநில அரசுகள், தேசிய பசுமை தீர்ப்பாயம் என பலரும் தங்களது நடவடிக்கைகளை துவங்கியிருக்கிறார்கள். இவ்வளவு ஆண்டுகள் இல்லாமல் ஒரே குரலில் அனைவரும் செயல்பட அவசியம் என்ன வந்தது ?




இன்று உச்சநீதிமன்றம் காற்று மாசுபாட்டை தடுக்க, மாதிரி செயல்முறையில் சில விஷயங்களை அமல்படுத்தி ஒரு உத்தரவை பிறப்பிக்க உள்ளது. இது குறித்து தலைமை நீதிபதி தாகூர் கருத்து கூறும்போது , 2000 சி.சி செயல்திறன் எஞ்ஜின் வாகனங்களுக்கு தடை, சொகுசு வாகன பதிவை நிறுத்துதல்,சுற்றுசூழல் வரியை இரட்டிப்பாக்குதல், வெளிமாநில வாகனங்களின் வருகையை தடுத்தல் என 6 விவகாரங்களை ஜனவரி மாதம் துவங்கி 3 மாதங்களுக்கு அமல்படுத்தலாம் என தெரிவித்தார்.



டெல்லி மாநில அரசு வாகனங்களை ஒற்றை,இரட்டை இலக்கங்கள் அடிப்படையில் இயக்க முடிவு செய்திருப்பதும், தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய மாநில அரசுகள் புதிய டீசல் வாகனங்கள் வாங்க தடை விதித்திருப்பதும், தற்போது உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளை விதிக்க உள்ளதும் வரவேற்க வேண்டிய நடவடிக்கைதான்.




ஆனால் இதனை அமல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளை நீதிமன்றமும், அரசுகளும் சரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages