24,000 கோடி செலவில் இந்தியா -இலங்கை இடையே பாலம் அமைக்கப்படும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

24,000 கோடி செலவில் இந்தியா -இலங்கை இடையே பாலம் அமைக்கப்படும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இந்தியா -இலங்கை இடையே கடற்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.




நாடாளுமன்ற மக்களவையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த கட்கரி, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு பாலம் அமைப்பதற்கு தேவையான நிதியை வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.



இலங்கைக்கு பாலம் அமைப்பதற்கு சுமார் 24,000 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.




பதவியேற்றது முதலே அண்டை நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், தெற்காசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் தொடர்புகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages