டெல்லிக்கு வரும் வாகனங்களுக்கான சுற்றுச்சூழல் வரி இரட்டிப்பு: உச்சநீதிமன்றம் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

டெல்லிக்கு வரும் வாகனங்களுக்கான சுற்றுச்சூழல் வரி இரட்டிப்பு: உச்சநீதிமன்றம்

டெல்லிக்கு வரும் வாகனங்களுக்கான சுற்றுச்சூழல் வரியை இரட்டிப்பாக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபடுவதைக் குறைப்பதற்காக, டீசல் கார்களுக்கு தடை கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும் 2005-ஆம் ஆண்டுக்கு முன், வணிக பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் டெல்லி நகருக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2000 சி.சி.க்கு அதிகமான செயல்திறன் கொண்ட டீசல் கார்களை தடை செய்ய வேண்டும் என்றும், டீசலில் இயங்கும் சொகுசு கார்களுக்கான வாகனப் பதிவை மார்ச் மாதம் வரை நிறுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபடுவதைத் தடுக்க, இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய என்ஜினை கார்களில் பொருத்த வேண்டும் என்றும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் NH1 மற்றும் NH8 சாலைகள் வழியாக தலைநகருக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

டெல்லி நகருக்குள் குப்பைகளை எரிக்க வேண்டாம் என்றும், நகருக்கு வெளியே சென்று குப்பைகளை எரிக்குமாறும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages