முக்கிய ஆவணங்களை காணவில்லை : சிபிஐ மீது கெஜ்ரிவால் புகார் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

முக்கிய ஆவணங்களை காணவில்லை : சிபிஐ மீது கெஜ்ரிவால் புகார்

முக்கிய ஆவணங்களை காணவில்லை : சிபிஐ மீது கெஜ்ரிவால் புகார்

புதுடில்லி : டில்லி தலைமை செயலாளர் அலுவலகத்தில் சிபிஐ நடத்திய சோதனைக்கு பிறகு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் பலவற்றை காணவில்லை என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சிபிஐ மீது புகார் கூறி உள்ளார். 













மத்திய அமைச்சர்கள் பலரின் ஊழலை மறைக்கவே சிபிஐ.,யால் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது எனவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டில்லி தலைமை செயலாரின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அரசியல் பழிவாங்கும் செயலுக்காக மத்திய அரசால் சிபிஐ பயன்படுத்தப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிரான ஊழல் தொடர்பான ஆவணங்களை அழிப்பதற்காகவும், அவரை காப்பாற்றுவதற்காகவுமே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சிபிஐ சோதனைக்கு பிறகு பல முக்கிய ஆவணங்களை காணவில்லை. டில்லி முதல்வர் அலுவலகத்தில் சோதனையிட்டு, டில்லி ஊழல் தடுப்பு பிரிவினர் சேகரித்து வைத்துள்ள ஆவணங்களை கைப்பற்ற வேண்டும் என்பதும், அந்த ஆவணங்களை அழித்து விட வேண்டும் என்பதும் தான் சிபிஐ.,க்கு இடப்பட்ட உத்தரவு. எனது அலுவலகத்தில் சோதனையிட்ட உங்கள் மீது விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கள் குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் கேட்டதற்கு, கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை. அர்த்தமற்றவை. அர்த்தமற்ற அவரின் குற்றச்சாட்டுக்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது என கூறி விட்டார்.

டில்லி தலைமை செயலர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், கெஜ்ரிவாலின் உதவியாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து 2015ம் ஆண்டு மே மாதமே அவருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதில் பல கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் கெஜ்ரிவால் அந்த கடிதத்தை கண்டுகொள்ளவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தனது உதவியாளரை பாதுகாக்கவே அவர் முயன்று வருகிறார். அதனாலேயே அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தினோம் என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages