அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு: ஆகம விதிகளை கடைப்பிடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 15 December 2015

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு: ஆகம விதிகளை கடைப்பிடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகர்களாக பணிபுரியலாம் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆகமவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2006–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோவில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்று அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது.

தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோவில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2006–ம் ஆண்டில் விசாரித்த உச்சநீதிமன்ற் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது.

இதற்கிடையே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை 207 பேருக்கு ஆலயங்களில் பூஜை செய்யும் பயிற்சியை அளித்து, அவர்களை நியமனத்துக்கு தயாராக வைத்தது. சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடையால் இந்த 207 பேரை கோவில்களில் அரசால் நியமிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது. ஆகம விதிகளை கடைபிடிக்க வேண்டும் என உதரவிட்டுள்ளது


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages