'எந்திரன் 2' படப்பிடிப்பு இன்று ஆரம்பம் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 15 December 2015

'எந்திரன் 2' படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

'எந்திரன் 2' படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

(16 Dec 9:53 a.m.) லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க உள்ள 'எந்திரன் 2' படப்பிடிப்பு இன்று ஆரம்பமாக உள்ளது. இது குறித்து இயக்குனர் ஷங்கர் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் நேற்று நள்ளிரவு " 2.0 படப்பிடிப்பு நாளை ஆரம்பமாகிறது, உற்சாகம்" எனக் குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அது பற்றி யாரும் தெரிவிக்கவில்லை. இப்போதுதான் முதல் முறையாக படத்தின் இயக்குனர் 'எந்திரன் 2' பற்றி தெரிவித்துள்ளார். அதில் கூட படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் சஸ்பென்சுடன் '2.0' என்றுதான் பதிவு செய்துள்ளார். நாளை மார்கழி மாதம் ஆரம்பமாக இருப்பதால் இன்றே படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஈவிபி படப்பிடிப்பு தளத்தில் சிறப்பான அரங்கங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதாம். தற்போது அங்கு பல பெரிய படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் தொந்தரவு இல்லாமல் தனிப்பட்டபாதுகாப்புடன் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியும் என்பதால் பெரிய இயக்குனர்களும், நடிகர்களும் அந்த இடத்தை விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட 'தூங்காவனம்' படத்தின் பல காட்சிகளை ஹோட்டல் செட் போட்டு கமல்ஹாசன் அங்கு படமாக்கியிருந்தார். இன்று ஆரம்பமாகும் படப்பிடிப்பில் எமி ஜாக்சன் கலந்து கொள்ள இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 2017ல் 'எந்திரன் 2' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages