டைட்டீல் யோசிக்கும் பிரபுசாலமன்
(16 Dec 11:54 a.m.) பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஆனாலும் இன்னும் டைட்டில் என்னவென்று முடிவெடுக்கவில்லையாம். இதுபற்றி தனுஷ், நாயகி கீர்த்தி சுரேஷிடம் கேட்டால், எங்களுக்கும் டைரக்டர் இன்னும் படத்தின் பெயரை சொல்லவில்லை. அதனால் நாங்களும் பிரபுசாலமன் படம் என்றுதான் மற்றவர்களிடம் சொல்லி வருகிறோம் என்கிறார்கள். மேலும், தனது படங்களில் கதைகளைத்தழுவி ரத்னசுருக்கமான டைட்டீல்களையே வைத்து வரும் பிரபுசாலமன், சில எழுத்துக்களில் நல்ல பெயராக தேடிக்கொண்டிக்கிறாராம். அந்த வகையில், தனது முதல் படத்திற்கு கிங் என்று பெயர் வைத்தார். அதன்பிறகு கொக்கி, லீ, மைனா, கம்கி, கயல் என்று சிறிய டைட்டீல்களாக வைத்து பெரிய வெற்றியாக கொடுத்து வந்திருக்கிறார். அந்த வரிசையில் தனுஷ் நடித்துள்ள இந்தபடத்திற்கும் சிறிய சில எழுத்துக்களிலேயே டைட்டில் வைப்பார் என்று தெரிகிறது. அதோடு, ரயில் பயணத்தின்போது நடக்கும் கதை என்பதால் பயணம் சம்பந்தப்பட்ட பெயர் வைக்கலாம் என்று யோசித்து வரும் பிரபுசாலமன், ஒருவேளை ரயில் என்று பெயர் வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
No comments:
Post a Comment