டெல்லியில் இனி "ஸ்கார்பியோ" வாங்க முடியாது.. மார்ச் 31 வரை எஸ்யூவி டீசல் கார்களுக்குத் தடை - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 15 December 2015

டெல்லியில் இனி "ஸ்கார்பியோ" வாங்க முடியாது.. மார்ச் 31 வரை எஸ்யூவி டீசல் கார்களுக்குத் தடை

டெல்லியில் இனி "ஸ்கார்பியோ" வாங்க முடியாது.. மார்ச் 31 வரை எஸ்யூவி டீசல் கார்களுக்குத் தடை

டெல்லி: டெல்லி தேசிய தலைநகர் பகுதிக்குள் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை டீசலில் ஓடும் எஸ்யூவி மற்றும் சொகுசுக் கார்களுக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்த காலகட்டத்தில் டீசலில் ஓடும் எஸ்யூவி மற்றும் சொகுசுக் கார்களைப் பதிவு செய்யக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அபாயகரமான அளவில் சுற்றுச்சூழல் மாசு போய்க் கொண்டிருப்பதால் அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதில் முக்கியமானதாக இந்த டீசல் கார்களுக்கான தடை வந்துள்ளது. 2000 சிசி அளவிலான டீசல் கார்களுக்கு இந்தத் தடை உத்தரவு பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Supreme Court bans registration of new diesel SUVs, luxury cars in Delhi till March 31

உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் மேலும் சில அம்சங்கள்... 

டெல்லிக்குள் வர வேண்டிய அவசியம் இல்லாத அனைத்து லாரிகளும், டெல்லி வழியாக செல்லவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 


  • இந்த லாரிகள் தேசிய நெடுஞ்சாலை 1 மற்றும் 8 ஆகியவற்றை பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. 
  • டெல்லிக்கு சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள், சுற்றுச்சூழல் இழப்பீட்டுக் கட்டணத்தை செலுத்தி விட்டுத்தான் தலைநகருக்குள் வர முடியும். பெரிய லாரிகளுக்கு ரூ. 2600 என்றும், சிறிய வாகனங்களுக்கு ரூ. 1400 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  •  டெல்லியில் செயல்பட்டு வரும் தனியார் டாக்சிகள் பெட்ரோல், டீசலிலிருந்து சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு கார்களாக மாற்ற வேண்டும். மார்ச் 1ம் தேதி வரை இவர்களுக்கு அவகாசம் தரப்படுகிறது. 
  • பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போதைக்கு சிறிய ரக டீசல் கார்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை
  • .போக்குவரத்துக் காவலர்கள் அனைவருக்கும் புகை மாசிலிருந்து தப்ப உதவும் மாஸ்க்குகளைத் தர வேண்டும்.
  •  டெல்லி அரசும், உள்ளாட்சி அமைப்புகளும், குப்பைகளை எரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் தேசிய தலைநகர் பகுதிக்குள் கட்டடம் கட்டுவோர் உரிய முறையில் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் மஹிந்திரா அன்ட் மஹிந்திரா உள்ளிட்ட பல கார் நிறுவனங்களுக்குப் பாதிப்பு வரும் என்று தெரிகிறது. மஹிந்திரா நிறுவனத்தில் ஒரு கார் கூட பெட்ரோல் கார் கிடையாது. அத்தனையும் டீசல் கார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages