பழனி கோயிலில் நாளை முதல் பெண்கள் லெகின்ஸ், ஜீன்ஸ் அணிய தடை - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 30 December 2015

பழனி கோயிலில் நாளை முதல் பெண்கள் லெகின்ஸ், ஜீன்ஸ் அணிய தடை


முருகப்பெருமானின் 3-வது படைவீடான பழனியில் ஆடைக்கட்டுப்பாடு நாளை முதல் அமல்படுத்துகின்றது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ளிட்ட கோயில்களில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆடைக்கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது.

அதன்படி பழனி மலைக்கோயில், திருஆவினங்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், இலக்கி நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட உப கோவில்களில் ஆடை கட்டுப்பாடு ஜனவரி 1–ம் தேதி முதல் பழனி திருக்கோயில் நிர்வாகம் அமல்படுத்த உள்ளது.

இதற்கான பதாகைகளும் பல்வேறு இடங்களில் கோயில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி நாளை (1-ம் தேதி) முதல் பெண்கள் ஜீன்ஸ், மிடி, லெகின்ஸ் போன்ற ஆடைகள் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பராம்பரிய ஆடைகள் அணியலாம். ஆண்கள் லுங்கி அணிந்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. வேட்டி சட்டை, பைஜாமா மற்றும் பேண்ட் சட்டை அணிந்து வரலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages