ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்க வலியுறுத்தி அலங்காநல்லூர் மக்கள் உண்ணாவிரதம் : 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 30 December 2015

ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்க வலியுறுத்தி அலங்காநல்லூர் மக்கள் உண்ணாவிரதம் : 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

அலங்காநல்லூர் : ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி அலங்காநல்லூரில் நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடந்து வந்தது. உச்சநீதிமன்றத் தடை காரணமாக கடந்த பொங்கலுக்கு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பொங்கல் பண்டிகைக்கு 15 நாட்களே உள்ளன. இதுவரை ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து, உறுதியான அறிவிப்பு வரவில்லை. இதனால் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே அனைத்து சமுதாய இளைஞர் நலச்சங்கம் சார்பில், இந்த பொங்கலுக்கு ஜல்லிகட்டை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், தமாகா, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் கிராம பொதுமக்கள், பாலமேடு ஜல்லிகட்டு கமிட்டி அமைப்பாளர்கள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோயிலில் காளைகளுடன் வழிபாடு: ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறைபட்டி மாரியம்மன் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரித்து ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து  வந்தனர். பின்னர் ஜல்லிக்கட்டு நடைபெறும் சங்கரன்பாறை  வாடிவாசலில் காளைகள் நிறுத்தப்பட்டு மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராம மக்கள், மாடு வளர்ப்பவர்கள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

செல்போன் டவரில் ஏறி போராட்டம்: அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரத்தில் உள்ள செல்போன் டவரில் நேற்று ஒரு வாலிபர் திடீரென ஏறி. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தியபடியே டவரில் ஏறி அந்த வாலிபரை கீழே இறக்கினர். விசாரணையில் அவர், அலங்காநல்லூர் அருகே அரியூர் கிராமத்தை சேர்ந்த குப்பார் (30) என்பதும், தென்னை மரம் ஏறும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

மத்திய அமைச்சர்களை அழைக்க டெல்லி பயணம்

ஜல்லிக்கட்டு பேரவை கூட்டம் தலைவர் ராஜசேகர் தலைமையில் மதுரையில் நேற்று நடந்தது. இதில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாடு வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கூட்டம் குறித்து ராஜசேகர் கூறுகையில், ‘‘ ஜல்லிக்கட்டை நடத்த முடியாததற்கு பாஜ கட்சியை சேர்ந்த மேனகாகாந்திதான் முக்கிய காரணம். அதே கட்சியை ேசர்ந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தற்போது முயற்சி எடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு எப்படி நடத்தப்படுகிறது என்பதை காட்ட மத்திய அமைச்சர்களை தமிழகத்திற்கு அழைக்க உள்ளோம். இதற்காக மத்திய அரசு அறிவிக்கும் நாளில் நாங்கள் டெல்லியில் இருக்க வேண்டும் என்பதற்காக எனது தலைமையில் 5 பேர் கொண்ட குழு செல்கிறது,’’ என்றார். பின்னர், ராஜசேகர் தலைமையிலான குழு நேற்று மாலை டெல்லி புறப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages