அமெரிக்க நிகழ்ச்சியை இந்தியில் வெளியிட விரும்பும் ஷாரூக்கான்!
ஷாரூக்கான் தான் நடித்துள்ள ''தில்வாலே'' படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாரூக்கான், அமெரிக்காவில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றை இந்தியில் வெளியிட தனக்கு ஆசை என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது... அமெரிக்க நிகழ்ச்சியான ''பிரேக்கிங் பேடு'' நிகழ்ச்சியை இந்தியில் வெளியிட வேண்டும் என்று ஆசை எனக்கு உள்ளது. இந்திய டிவிக்களில் அதை கொண்டுவருவது கொஞ்சம் கடினம் தான். ஏனென்றால் மாபியா, போதை தொடர்பான விஷயங்களை நம்மூர் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியில் வரும் கதையில் ஒரு மனிதன் தன் குடும்பத்தை காக்க சாகும் நிலைக்கு கூட தள்ளப்படுகிறார். நல்ல ஒரு உணர்வுப்பூர்வமா கதை என்று கூறியுள்ளார். தில்வாலே படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது.
No comments:
Post a Comment