16 முறை திருமணம் 37 குழந்தைகள் 50 பேரக்குழந்தைகள் கருத்துகள் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 15 December 2015

16 முறை திருமணம் 37 குழந்தைகள் 50 பேரக்குழந்தைகள் கருத்துகள்



 

மனாமா

சவுதி அரேபியாவை சேர்ந்த 78 வயது முதியவர்  16 பெண்களை திருமணம் செய்துள்ளதாகவும் 37 குழந்தைகள் இருப்பதகவும் பெருமைபட கூறுகிறார். இது அறிவுபூர்வமற்ற செயல் என பலரும் பல்வேறாக விமர்சனம் செய்து உள்ளனர்.


சவுதி அரேபியாவை சேர்ந்தவர்  மொகமது பின் ஹோஸ்னி அல் சிம்ரணி (வயது 78) ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். இவர் சவுதி செய்தி இணையதளமான சபக்கிடம்  கூறியதாவது:-

 எனது 14 வது வயதில் முதல் திருமணம் செய்து கொண்டேன். 2 வருடம் கழித்து முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு  மற்றொரு பெண்ணை திருமணம் செய்தேன்.இப்படியாக ஆரம்பித்த தொடர் திருமணங்கள் தற்போது 16ஆகி விட்டது.எனக்கு 21 மகன்கள் 16 மகள்கள் உள்ளனர். மேலும் 50 பேரக்குழந்தைகள் உள்ளனர்.சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து உள்ளேன்.  எனகூறினார்

ஹோஸ்னி தென்மேற்கு மாகாணமான அசிரில் உள்ள பிஷாக்கில் வாழ்ந்து வருகிறார்.இவர் எப்பொழுதும் 4 மனைவிகளுக்கு மேல் வாழ்ந்தது இல்லை. இஸ்லாத்தின் சட்டத்தை  கடைபிடித்து வந்து உள்ளார்.இவரது முன்னாள் மனைவிகள் இறந்து உள்ளனர் அல்லது விவாகரத்து பெற்று உள்ளனர்.

ஹோஸ்னியின் இந்த தொடர் திருமணத்திற்கு ஆன் லைனில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.இவர் தனது சொந்த சந்தோஷத்திற்காக மட்டுமே வாழ்ந்து உள்ளார் மனைவிகளின் நலன் மேல் அக்கறை கொண்டது இல்லை என கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages