மீண்டும் கர்ப்பம் ஆனதால் ரீ என்ட்ரி முடிவை தள்ளிவைத்தார் ஜெனிலியா
சந்தோஷ் சுப்பிரமணியம்' நாயகி ஜெனிலியா இந்தி நடிகரும், நீண்ட நாள் காதலருமான ரிதேஷ் தேஷ்முக்கை மணந்துகொண்டு நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்தார். மீண்டும் நடிக்க வருவீர்களா என்றபோது நிச்சயம் வருவேன் என்றார். புதிய படத்தில் நடிப்பதற்காக ஸ்கிரிப்ட்டும் கேட்டு வந்தார். இந்நிலையில் கர்ப்பம் அடைந்தார். கடந்த ஆண்டு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ரியான் என பெயரிட்டார். சமீபத்தில் குழந்தைக்கு முதல் வயது பிறந்த நாள் கொண்டாடினார். குழந்தை பிறந்து ஒருவருடம் ஆன நிலையில் அவர் மீண்டும் நடிக்க வருவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது மீண்டும் கர்ப்பம் ஆகி இருக்கிறார். அடுத்த ஆண்டு 2வது குழந்தைக்கு தாய் ஆகிறார். இதையடுத்து சினிமாவில் ரீ என்ட்ரி ஆகும் எண்ணத்தை மறுபடியும் தள்ளி வைத்திருக்கிறார்.
No comments:
Post a Comment