கன்னடத்துக்கு தாவினார் அர்ஜுன் மகள்
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா. 'பட்டத்துயானை' படத்தில் விஷால் ஜோடியாக நடித்தார். எதிர்பார்த்தளவுக்கு ஐஸ்வர்யாவுக்கு படம் வராததால் ஏமாற்றம் அடைந்தார். தந்தை அர்ஜுன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் அவ்வப்போது தனது ஆசையை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் கன்னட மொழி படத்தில் ஹீரோயின்களுக்கு இடையே போட்டி குறைவு. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே அங்கு ஹீரோயின்கள் உள்ளனர். அதில் தன அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க முடிவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா. அர்ஜுனிடம் இதுபற்றி சொன்னதுடன் படத்தை நீங்களே இயக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு சம்மதம் கிடைத்தது. ஐஸ்வர்யா நடிகையாக மட்டுமல்லாமல் இப்படத்தின் தயாரிப்பாளராகவும் பொறுப்பு ஏற்கிறார். ஏற்கனவே தமிழ், கன்னடம். தெலுங்கில் அர்ஜுன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான ஜெய்ஹிந்த் 2ம் பாகம் படத்தை ஐஸ்வர்யா தயாரித்திருப்பதுடன் அதில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment