தடைகளை உடைக்க சண்டி யாகம் செய்த ராம் சரண்
சிரஞ்சீவி மகன் ராம் சரண். சமீபத்தில் இவர் நடித்த 'புருஸ்லீ' படம் திரைக்கு வந்தது. எதிர்பார்த்தளவுக்கு படம் ஹிட்டாகவில்லை. மேலும் தந்தை சிரஞ்சீவி நடிக்கும் 150வது படத்தை தயாரிக்கவும் முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறார். அதற்கு சரியான ஸ்கிரிப்ட் அமையவில்லை. தமிழில் விஜய் நடித்த 'கத்தி' ரீமேக்கில் நடிக்க சிரஞ்சீவி முடிவு செய்தபோது அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. 150வது படத்தை இயக்குவதாக இருந்த புரி ஜெகனாத்துடன் சிரஞ்சீவிக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இந்த தடைகளை உடைத்தெறிவதற்கு யாகம் செய்தால் சரியாகிவிடும் என்று குடும்பத்து பெரியவர்களும் ஆன்மிகவாதிகளும் ராம் சரணுக்கு ஆலோசனை கூறினர். இதையடுத்து மஹாருத்ர சட்ட சண்டி யாகம் நடத்த முடிவு செய்தனர். ராம் சரணின் மனைவி உபசனாவின் சொந்த ஊர் தெலங்கானாவில் நிசாமாபாத் மாவட்டத்தில் தும்பகொண்டா கிராமம். அங்கு யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை உபசனாவின் குடும்பத்தினர் செய்தனர். அதில் சிரஞ்சிவீ மனைவி சுரேகா மற்றும் ராம் சரண், உபசனா மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். சுரேகா முன்னின்று பூஜைகள் நடத்தினார். நட்சத்திர குடும்பத்தை பார்க்க கிராமமே திரண்டு வந்தது.
No comments:
Post a Comment