புகார்கள் குவிகின்றன சிம்பு-அனிருத் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை போலீசார் தீவிரம்; ஆபாச பாடல் குரலை ஆய்வு செய்கிறார்கள் கருத்துகள் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

புகார்கள் குவிகின்றன சிம்பு-அனிருத் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை போலீசார் தீவிரம்; ஆபாச பாடல் குரலை ஆய்வு செய்கிறார்கள் கருத்துகள்


சென்னை,


சிம்பு-அனிருத் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையில் சென்னை போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆபாச பாடல் குரல் சிம்புவுடையதுதானா? என்று ‘சைபர் கிரைம்’


போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.


ஆபாச பாடல்


அனிருத் இசையில் சிம்பு பாடியதாக ‘யூடியூப்’ மற்றும் ‘வாட்ஸ்-அப்’களில் சர்ச்சை பாடல் ஒன்று பரவி வருகிறது. இந்த பாடல் வரிகள் பெண்களை கேவலப்படுத்துவது


போல் ஆபாசமாக இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. மகளிர் அமைப்புகள் சிம்பு-அனிருத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றன. போலீசிலும் புகார்கள்


அளிக்கப்பட்டு வருகின்றன.


கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்பு-அனிருத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வருகிற 19-ந்தேதி இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மனில்


குறிப்பிடப்பட்டு உள்ளது.


இதைத்தொடர்ந்து சிம்பு-அனிருத் தரப்பில் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்யலாமா? என்றும்


ஆலோசிக்கிறார்கள்.


போலீஸ் பாதுகாப்பு


கோவை போலீசில் இருவரும் நேரில் ஆஜராக மாட்டார்கள் என்று தெரிகிறது. அதற்கு பதிலாக வக்கீல்கள் மூலம் தங்கள் விளக்கங்களை அனுப்பி வைக்க முடிவு


செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


போராட்டம் தீவிரம் அடைவதை தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள சிம்பு வீட்டிலும் அண்ணாமலை புரத்தில் உள்ள அனிருத் வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு


போடப்பட்டு உள்ளது.


இருவரும் தற்போது சென்னையில் இல்லை. அனிருத் வீடு பூட்டி கிடக்கிறது. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களின் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டை பூட்டி விட்டு, வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது.


சென்னையில் வழக்கு


இதற்கிடையில் சிம்பு-அனிருத் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 3 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த புகார்கள் மீது


வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையில் சென்னை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கோவை போலீசில் ஏற்கனவே சிம்பு-அனிருத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல்


சென்னையில் அளிக்கப்பட்ட புகார்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது ஆபாச பாடலில் இடம்பெற்றுள்ள குரல்


சிம்புவுடையதுதானா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிம்பு குரல்தான் என்று உறுதியானால் வழக்குப்பதிவு செய்யப்படும்’’ என்றார்.


மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் மகேஷ் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில்


இசையமைத்து பாடலை பாடிய நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அந்த கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தீனன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages