சவாலை எதிர்கொள்ள தயாராகும் ஸ்ருதிஹாசன்
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான படம் பிரேமம். நிவின் பாலி நாயகனாக நடித்த இந்த படத்தில் சாய் பல்லவி, அனுபமா, மடோனா செபஸ்டியன் என மூன்று நாயகிகள் நடித்திருந்தனர். இதில் சாய் பல்லவி நடித்த மலர் என்ற டீச்சர் கேரக்டர் மலையாள ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் ஒரே படத்தில் இளைஞர்களின் மனங்கவர்ந்த நாயகியாகி விட்டார் சாய் பல்லவி. இந்தநிலையில், அந்த படத்தை தற்போது தெலுங்கில் மஜ்னு என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். அந்த படத்தில் மலையாளத்தில் சாய் பல்லவி நடித்த டீச்சர் வேடத்தில் நடிக்க சில நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வந்தநிலையில், பின்னர் ஸ்ருதிஹாசன் கமிட்டானார். அதோடு சாய் பல்லவி பிரேமம் படத்தில் நடித்தது போன்று புடவை அணிந்த கெட்டப்பில் ஸ்ருதிஹாசன் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையதளங்களில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் என்று பார்த்த நிலையில், ஸ்ருதியை அந்த கெட்டப்பில் பார்த்து ரசிகர்கள் கேலியான கமெண்டுகளை கொடுத்தனர். அதோடு, கவர்ச்சி நடிகை ஸ்ருதிஹாசன், அந்த குடும்பப்பாங்கான கெட்டப்புக்கு பொருந்தவில்லை என்றும் கிண்டலடித்தனர்.
ஆனால் இந்த சேதி ஸ்ருதிஹாசனின் கவனத்துக்கு சென்றபோது கடும் கோபமாகி விட்டாராம். அதோடு, சாய் பல்லவி நடித்த அந்த வேடத்தில் இன்னும் மிகச்சிறப்பாக நடித்து என்னை கிண்டலடித்த ரசிகர்களிடமே கைதட்டல் பெறுவதே எனது நோக்கம் என்று சவாலாக கூறி வருகிறாராம்
No comments:
Post a Comment