சென்னை,
வரலாறு காணாத மழை காரணமாக தமிழகத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டது. 350-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், தூத்துக் குடி ஆகிய மாவட்டங் கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டன.
வாட்ஸ்-அப் மூலம் பேச்சு
வெள்ள நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் வேகமாக நடைபெற்று வருகின்றன.
நிவாரண பணிகள் குறித்து தமிழக மக்களிடம் நேரடியாக பேசுவதுபோல்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியுள்ள பேச்சு, வாட்ஸ்-அப் மூலம் தமிழகமெங்கும்
நேற்று மாலை பரவியது. அதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியிருப்பதாவது;-
கவலை வேண்டாம்
வணக்கம், உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்.
கடந்த 100 ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளச்
சேதங்களால், நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து நினைத்து நான்
வருந்துகிறேன், கவலை வேண்டாம்.
இது உங்கள் அரசு. எதையும் எதிர்கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள்
அளித்திருக்கிறீர்கள். உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் நான்
இருக்கிறேன். விரைவில், இப்பெரும் துன்பத்தில் இருந்து உங்களை மீட்டு புது
மலர்ச்சியும், எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி.
எனக்கு என்றுதனி வாழ்க்கை கிடையாது
போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும்
புனரமைப்புப் பணிகளையும் முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறேன்.
அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், காவல்துறையினரும், முப்படையினரும்,
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும், தன்னார்வத்
தொண்டர்களும், அயராது, தோளோடு தோள் சேர்ந்து உங்களுடன் கடுமையாக
உழைத்தார்கள்.
உங்களுக்கு வரும் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கென்று தனி
வாழ்க்கை கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்கு சுயநலம் அறவே
கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான். என் இல்லமும், உள்ளமும்
தமிழகம்தான்.
துயரங்கள் துடைக்கப்படும்
என் பெற்றோர் வைத்த ஜெயலலிதா என்ற பெயரே மறந்துபோகும் அளவுக்கு, நீங்கள்
அழைக்கின்ற அம்மா என்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக
அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த அரசு, இயற்கை பேரிடர்களை வெற்றிகொள்வதில் எப்போதும் பெயர் பெற்ற அரசு
என்பதை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும்
இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நன்றி.
இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா பேசியுள்ளார்.
No comments:
Post a Comment