+2, டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் தொழிற்பயிற்சி வாய்ப்பு - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

+2, டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் தொழிற்பயிற்சி வாய்ப்பு

மாணவர்கள் தங்கள் படிப்பறிவுடன் மட்டுமில்லாது, செயல்முறை அனுபவத்தை பெறும் நோக்கில் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட திட்டம் தேசிய தொழில் பழகுநர் பயிற்சித் திட்டம் ஆகும்.

இத்திட்டத்தின் படி, பொறியியல், டிப்ளமோ மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது வழக்கமான படிப்பின் போது பெற இயலாத செயல்முறை அனுபவத்தை இந்த பயிற்சியில் பெற முடியம்.

பயிற்சிக் காலத்தில் மாணவர்களுக்கு மாதந்ததிர உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. பயற்சியை வெற்றிகரமான முடிப்பவர்களுக்கு இந்திய அரசால் தொழில்திறன் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். அது அவர்கள் மேற்கொண்டு வேலை வாய்ப்பிற்காக செல்கின்ற போது ஓராண்டு அனுபவ சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும். இதுமட்டுமில்லாமல், பயிற்சிக்குப் பின் அவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.

பிரத்யேக இணையதளம்

மாணவர்கள் எந்தவித சிரமுமின்றி, இந்த தேசிய தொழில் பழகுநர் பயிற்சித்  திட்டதில் சேர்வதற்கு ஏதுவாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பிரத்யேகமாக http://www.boatsr-apprentice.tn.nic.in/ என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் மாணவர்கள் எந்தவித அலைச்சலுமின்றி எந்த இடத்தில் இருந்து கொண்டும், தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

தொழில் நிறுவனங்களும், தங்களது தொழிற்பயிற்சி குறித்த விவரங்களை இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இது மாணவர்களுக்கு அவர்கள் பெறப் போகும், தொழிற்பயிற்சி குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.  மேலும், தொழிற்கல்வி நிறுவனங்களும், மொத்தமாக மாணவர்களை பதிவு செய்யும் வசதி இணையதளத்தில் செய்து தரப்பட்டுள்ளது.

மேலும் தொழில் பழகுநர் நியமனதிற்கான இணைய வழி ஒப்புதல் பெறும் வசதியும், பயிற்சிக்குப் பின், மின்னியல் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்களை பெறும் வசதியும் இணையத்தில் செய்து தரப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages