பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. பெட்ரோல் மீது லிட்டருக்கு 30 காசும், டீசல் மீது லிட்டருக்கு ஒரு ரூபாய் 17 காசும் கலால் வரி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக, பெட்ரோல் லிட்டருக்கு 50 காசும், டீசல் லிட்டருக்கு 46 காசும் நேற்று நள்ளிரவு முதல் விலை குறைக்கப்பட்டன.

கச்சா எண்ணெய் விலை சரிவின் முழுப் பலனையும் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனை விலையை நேற்று சிறிதளவு குறைத்த நிலையில், அவற்றின் மீதான கலால் வரியை மீண்டும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இதன்மூலம் அரசுக்கு நடப்பு நிதியாண்டில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை உயர்த்தப்பட்ட கலால் வரி மூலம், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 19 ரூபாய் 36 காசும், டீசல் விலையில் லிட்டருக்கு 18 ரூபாய் 63 காசும் அரசுக்கு வரியாகக் கிடைக்கிறது. எனினும், கலால் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாது என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages