சிரியா விவகாரத்தில் நிலைப்பாடு மாறினால் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப் படைக்கு ரஷியாவை வரவேற்போம்: ஒபாமா - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 24 November 2015

சிரியா விவகாரத்தில் நிலைப்பாடு மாறினால் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப் படைக்கு ரஷியாவை வரவேற்போம்: ஒபாமா

சிரியா விவகாரத்தில் நிலைப்பாடு மாறினால் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப் படைக்கு ரஷியாவை வரவேற்போம்: ஒபாமா
வாஷிங்டன், நவ.25-

சிரியா விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் 65 நாடுகள் அடங்கிய கூட்டுப் படைக்கு ரஷியாவை வரவேற்போம் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. கடந்த நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உள்பட இரண்டரை லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிபரின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவில் இருந்து போர்க்கப்பல்களில் ஏராளமான ஆயுதங்களும், ரஷ்ய ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீவிரவாதத்தை ஒழிக்கும் நோக்கத்தில்தான் சிரியா அரசுக்கு ரஷியா ஆயுதங்களை அளித்து, ஆதரித்து வருவதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறியிருந்தார்.

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு முன்னர் பேட்டியளித்த புதின், ‘அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து இறக்க வேண்டுமா?, எப்போது இறக்க வேண்டும்? என்பதை சிரியா நாட்டின் மக்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். அதைவிடுத்து, சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியை அழிக்க எடுக்கப்படும் எந்த முயற்சியாக இருந்தாலும், லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டது போன்ற மோசமான சூழ்நிலையை உண்டாக்கி விடும் என நான் நம்புகிறேன். அங்கு அரசின் அனைத்து துறைகளும் சீர்குலைந்துப்போய் உள்ளன. ஈராக்கிலும் இதேநிலை தான் நீடிக்கின்றது.

சிரியாவில் தற்போது நிலவிவரும் சூழ்நிலையை சீர்படுத்த ஆளும் அரசை பலப்படுத்த வேண்டுமானால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உதவியே தீர வேண்டியுள்ளது. அதேவேளையில், எதிர்ப்பாளர்களுடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தி, சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ள வேண்டியும் உள்ளது.’ என்று கூறினார்.

சிரியாவில் ரஷியப் படைகளின் தலையீடு அதிகமாக உள்ளதே,,? இது அதிபர் பஷர் அல் ஆசாத்தை மீட்பதற்காகவா? என்ற கேள்விக்கு பதிலளித்த புதின், ‘உங்கள் யூகம் சரிதான்’ என்றும் தெரிவித்தார்.

சொந்தநாட்டு மக்களை மிககொடூரமாக நடத்திய அதிபர் ஆசாத்தின் அணுகுமுறைதான், சிரியாவில் உள்நாட்டுப் போரையும், ஐ.எஸ். தீவிரவாதிகள் என்ற இயக்கத்தையும் உருவாக்கி விட்டது என அமெரிக்கா குற்றம்சாட்டிவரும் நிலையில் புதின் இவ்வாறு பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிரியா விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் 65 நாடுகள் அடங்கிய பன்னாட்டுப் படைக்கு ரஷியாவை வரவேற்போம் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தற்போது கூறியுள்ளார்.

வாஷிங்டன் நகரின் வெள்ளை மாளிகையில் பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேவுடன் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த ஒபாமா கூறியதாவது:- சிரியாவில் போராட்டக்காரர்கள் மீது ரஷியா நடத்திவரும் தாக்குதல்கள் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை பலப்படுத்ததான் உதவும் என்றே நானும் ஹாலண்டேவும் கருதுகிறோம். பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் எழுச்சிக்கு உதவிகரமாக இருந்து வருகின்றது.

ஆசாத்தின் ஆட்சியை நிலைக்கச் செய்வதில் நாட்டம் காட்டிவரும் ரஷியா, ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதில் தனது நோக்கத்தை திசை திருப்பினால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ரஷியா மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியதாக அது அமையும். இல்லாவிட்டால், வியன்னா மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகளின்படி சிரியாவில் உள்நாட்டுப் போர்நிறுத்தம் ஏற்படவும், அதிபர் ஆசாத்திடம் இருக்கும் ஆட்சி அதிகாரத்தை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசிடம் ஒப்படைக்கவும் ரஷியா முழுமுயற்சி எடுக்க வேண்டும்.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை ஒழிப்பதற்கு அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் தலைமையிலான பன்னாட்டுப் படையில் 65 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், ரஷியாவும், ஈரானும் ஆசாத்தை ஆதரிக்கும் தனி அணியாக செயல்படுகின்றன. சிரியா விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் எங்கள் படைக்கு ரஷியாவை வரவேற்போம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages