மழை வெள்ளம் பாதித்த
பகுதிகளில் தொற்று நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 1127 மருத்துவ முகாம்கள்
அமைக்கப்பட்டு காய்ச்சல், வயிற்று போக்கு, சேற்றுப்புண் போன்ற மழைக்கால
நோய்கள் ஏற்படாமல் தடுக்க சுகாதாரப் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
காய்ச்சல் மற்றும் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 9 வகை மூலிகை கலந்து நிலவேம்பு குடிநீர் தயாரிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 1061 அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படும்.
தினமும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பயன் பெறக்கூடிய வகையில் நிலவேம்பு குடிநீர் தயாரிக்கப்பட்டு சித்த மருத்துவத்துறை சார்பில் வழங்கப்படும்.
சென்னை தண்டையார்பேட்டை புறநகர் அரசு ஆஸ்பத்திரியில் நிலவேம்பு குடிநீர் முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஸ்டான்லி டீன் கிறிஸ்டியன் மோசஸ் கலந்து கொண்டனர்.
நிலவேம்பு குடிநீர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம். பெரியவர்களுக்கு 30 மில்லி முதல் 50 மில்லி வரையிலும் ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு 10 மில்லி வரை குடிக்க வேண்டும். தினசரி 5 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
அரசு ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படும் நிலவேம்பு குடிநீரை பொதுமக்கள் குடித்து பயன்பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment