ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ்; இறுதிப்போட்டியில் பாம்ப்ரி - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 19 October 2015

ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ்; இறுதிப்போட்டியில் பாம்ப்ரி


காக்சிங்,

ஏ.டி.பி.சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டி தைவானில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் உலக தர வரிசையில் 125-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, 40-ம் நிலை வீரர் செக் குடியரசின் ஜிரி வெஸ்லியை சந்தித்தார். 1 மணி 23 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி 7-6 (7-2), 6-1 என்ற நேர்செட்டில் ஜிரி வெஸ்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். சமீபத்தில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டத்தில் ஜிரி வெஸ்லியிடம் அடைந்த தோல்விக்கு யுகி பாம்ப்ரி நேற்று பழிதீர்த்தார். உலக தர வரிசையில் ‘டாப்-50’க்குள் உள்ள வீரரை யுகி பாம்ப்ரி வீழ்த்துவது இது 2-வது முறையாகும்.  

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages