பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீமை குறித்து மத்திய மாநில அரசுகள்
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க
அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும்
உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 6 மாத குழந்தைகளான அர்ஜுன் கோயல், அவுரவ் பண்டாரி
மற்றும் 14 மாத குழந்தையான ஜோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பில் அவர்களது
பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில் பட்டாசு சத்தம் மற்றும் புகையால் தங்கள் வளர்ச்சி பாதிப்பதாக அவர்கள்
கூறியிருந்தனர்.
இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, அமிதவ ராய் ஆகியோரடங்கிய அமர்வு கூறியிருப்பதாவது:
வாண வேடிக்கைகளால் ஏற்படும் தீமை குறித்து மத்திய மாநில அரசுகள் அச்சு
மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் வழியாக பரவலான விழிப்பு ணர்வை ஏற்படுத்த
வேண்டும்.
மேலும், பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், உதவிப்
பேராசிரியர்கள், பேராசிரி யர்கள் தங்களின் மாணவர்களுக்கு பட்டாசுகளின் தீமை
குறித்து அறிவுறுத்த வேண்டும்.
மேலும், மனுதாரர் தரப்பில் இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே
பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு
நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment