யுஹான் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் சானியா ஜோடி - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 19 October 2015

யுஹான் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் சானியா ஜோடி


யுஹான்,
யுஹான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் 2–வது சுற்றில் ‘நம்பர் ஒன்’ கூட்டணியான இந்தியாவின் சானியா மிர்சா– சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் ஜான் இக்னாசிக் (போலந்து)– அனஸ்டசியா ரோடியனோவா (ஆஸ்திரேலியா) இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.
ஒற்றையர் கால்இறுதி ஆட்டங்களில் ராபர்ட்டா வின்சி (இத்தாலி) 7–6 (2), 6–3 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவையும் (செக்குடியரசு), ஸ்பெயினின் கார்பின் முகுருஜா 6–2, 6–2 என்ற நேர் செட்டில் அன்னா கரோலினாவையும்(சுலோவக்கியா) வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தனர். தற்போது தரவரிசையில் 8–வது இடம் வகிக்கும் முகுருஜா, இந்த போட்டியில் பட்டம் வென்றால் 4–வது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages