தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி.) சமீபத்தில் நேர்காணல் அல்லாத ஒருங்கிணைந்த குடிமைப்
பணிகள் தேர்வு-2 எனும் தேர்வை அறிவித்து உள்ளது. இதன்மூலம் தமிழக அரசுத்
துறைகளில் 'பெர்சனல் கிளார்க்', 'அசிஸ்டன்ட்' போன்ற பணியிடங்கள்
நிரப்பப்படுகிறது. மொத்தம் 1863 பணியிடங்களை பூர்த்தி செய்ய உள்ளனர். இதில்
அமைச்சுப் பணிகள் பிரிவில் 1332 பணியிடங்களும், வரித் துறையில்
'அசிஸ்டன்ட்' பணிக்கு 191 இடங்களும், தலைமைச் செயலக சேவைப் பணிகள் பிரிவில்
339 பணியிடங்களும் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தமிழக அரசு ஒதுக்கீடு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சவயது வரம்பு தடையில்லை.
பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் போன்ற அறிவியல், கலை படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள், பொருளாதாரம், வணிகவியல், பி.பி.எம். படிப்பு படித்தவர்களுக்கும் பணிகள் உள்ளன.
பணியிடங்கள் நேர்காணல் இல்லாமல் எழுத்து தேர்வின் அடிப்படையில் மட்டும் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
விருப்பம் உள்ளவர்கள் ரூ.125 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 'ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன்' முறையில் ஏற்கனவே பதிவு செய்திருப்பவர்கள், அப்ளிகேசன் கட்டணம் ரூ.50 தவிர்த்து, தேர்வுக் கட்டணம் 75 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். ஆன்லைன்/ஆப்லைன் இரு வழிகளிலும் கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 11-11-2015-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

No comments:
Post a Comment