ராயபுரம்,
சென்னை புதுவண்ணாரப்பேட்டை இருளப்பன் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் பிரேம். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ரத்னா (வயது 4). கடந்த ஒரு வாரமாக ரத்னா தீராத காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாள். அவளுக்கு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்தனர்.
தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததால் சிறுமிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ரத்னாவிற்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment