பெருகிவரும் உலக மக்களின் ஆற்றல் தேவை சிறுத்தை வேகத்தில் செல்கிறது
என்றால் உலகின் ஆற்றல் உற்பத்தியின் வேகமோ ஆமை வேகத்தில்தான்
சென்றுகொண்டிருக்கிறது. இந்த நடைமுறைச் சிக்கலுக்கான காரணம் என்னவென்று
யோசித்தால், ஒருபக்கம் பெட்ரோல் போன்ற புதைபடிம எரிபொருட்கள் அளவில்
குறைவாக இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தி உலக வெப்பமயமாதலையும் அதிகப்படுத்திவிடுகிறது. மற்றொருபக்கம், நிலக்கரி போன்ற எரிபொருட்கள் அளவில் அதிகமாக இருந்தாலும் மனித உடல்கள் மற்றும் சுற்றுச்சூழலையும் வெகுவாக மாசுபடுத்திவிடுகிறது.
சரி போகட்டும், காற்றாலைகள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்துகொள்ளலாம் என்றால் காற்றாலைகளுக்கு அதிகப்படியான இடமும் தேவைப்படுகிறது. அவற்றால் பறவைகள், வவ்வால்கள் போன்ற விலங்குகள் இறந்து போவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இதையெல்லாம் விட்டுவிட்டு சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து உலக மக்களின் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்யலாம் என்றால் அதற்காக ஆகும் செலவோ மிகவும் அதிகம். இப்படி உலக மக்களின் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய எந்த முயற்சி எடுத்தாலும் ஏதாவது ஒரு சிக்கல் வந்துவிடுகிறதே என்று மூளையை கசக்கிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் முற்றிலும் புதிய தொழில்நுட்பம்தான் ‘செயற்கை ஒளிச்சேர்க்கை’.
கோடிக்கணக்கான வருடங்களாக சூரிய ஒளி, கரியமில வாயு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான உணவை தாங்களே உற்பத்தி செய்துகொள்ள தாவரங்கள் பயன்படுத்தும் ஒரு செயல்திறன்மிக்க உத்திதான் ‘ஒளிச்சேர்க்கை’ என்பது.
தாவரங்கள் மட்டுமல்லாமல் பாசிகள் மற்றும் சில வகை பாக்டீரியாக்கள் ஆகியவை பயன்படுத்தும் இந்த ஒளிச்சேர்க்கை முறையால் மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து ஆகிய சத்துகள் உற்பத்தியாகின்றன. ஆனால் தற்போது மனிதர்களின் அவசரத்தேவை தேவை உணவல்ல. மகிழுந்து போன்ற வாகனங்களை இயக்க திரவ எரிபொருட்களும் குளிர்சாதனப்பெட்டி போன்ற மின் சாதனங்களை இயக்க மின்சாரமும் தான்.
உலக ஆற்றல் தேவையானது உலக எரிபொருட்களின் அளவைத்தாண்டி பல மடங்கு உயர்ந்துவிட்டது என்று புள்ளிவிவரங்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும் வேளையில்தான் ஆஸ்திரேலியாவிலுள்ள மொனாஷ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செயற்கை ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அட்டகாசமான ஒரு சூரிய ஒளிக்கருவியை கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள். இதன்மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிக பொருட்செலவு போன்ற எந்த நடைமுறைச்சிக்கல்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் அதிகபட்ச செயல்திறன்கொண்ட இந்த செயற்கை ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பமானது, சூரிய ஒளியைப் பயன்டுத்தி தண்ணீரை ஹைட்ரஜனாக மாற்றும் தாவர ஒளிச்சேர்க்கையை மிகவும் சரியாக பிரதிபலிக்கக்கூடியது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தண்ணீருக்குள் மின்சாரத்தைப் பாய்ச்சுவதன் மூலம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகிய வாயுக்களை உற்பத்தி செய்யும் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இன்னும் சில வருடங்களில் செலவே இல்லாமல் நம் வீடுகளுக்கும், மகிழுந்துகளுக்கும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ளலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மின்வேதியல் முறை வழியாக தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாக பிரிக்கும் இந்த செயற்கை ஒளிச்சேர்க்கையின் மூலம் மலிவான, தூய்மையான, புதுப்பிக்கக்கூடிய மற்றும் தக்க வைக்கக் கூடிய ஒரு எரிபொருள் கிடைக்கிறது என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட தலைமை ஆய்வாளர் லியோன் ஸ்பிச்சியா.
செயற்கை ஒளிச்சேர்க்கைத் துறையைப் பொறுத்தவரை வெற்றி என்பது 10 சதவீத ஆற்றல் பயன்திறனை அடைவதுதான். ஆனால் லியோன் ஸ்பிச்சியா தலைமையிலான இந்த புதிய செயற்கை ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பமோ 10 சதவீதத்தையும் தாண்டி 22.4 சதவீத ஆற்றல் பயன்திறனை அடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த துறையில் நிகழ்த்தப்பட்ட இதற்கு முந்தைய சாதனையான 18 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 22.4 சதவீதம் என்பது பெரிய வித்தியாசமில்லை. இருந்தபோதிலும் இந்த ஆற்றல் பயன்திறனை அடைய மிகவும் மலிவான, உலகில் மிதமிஞ்சிய அளவில் இருக்கக்கூடிய மற்றும் அதிக உறுதி அளிக்கக்கூடிய நிக்கல் என்னும் உலோகத்தை வினையூக்கியாக பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது என்று கூறப்படுகிறது.
நிக்கலை விட அதிநவீனமான ஆனால் அதேசமயம் பரிச்சயமில்லாத மற்றும் மிகவும் விலை உயர்ந்த உலோகங்களைப் பயன்படுத்தக்கூடிய வேறு பல வினையூக்கிகளும் இருக்கின்றன என்கிறார் துணை ஆய்வாளர் டக் மெக்பர்லான். மாறாக நிக்கலோ விலை மலிவான ஆனால் தண்ணீர் மின்பகுப்பு கருவியில் உறுதியான ஒரு வினையை உற்பத்தி செய்யக்கூடிய திறனுள்ள ஒரு சாதாரண உலோகம் என்கிறார் ஆய்வாளர் டக்.
இந்த ஆய்வில் மற்றுமொரு புதுமை என்னவென்றால், இந்த செயற்கை ஒளிச்சேர்க்கைத் தொழிநுட்பக் கருவியை ஆற்றுத்தண்ணீரைப் பயன்படுத்தி இயக்க முடியும் என்பதுதான். அதாவது இந்த தொழில்நுட்பத்தை உலகின் பல்வேறு புவியியல் பகுதிகளில் எந்த சிக்கலுமில்லாமல் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொழிநுட்பத்தின் பயன்பாடுகள் என்று பார்த்தால் அவை எண்ணிலடங்காதவை என்கிறார் மெக்பர்லான். உதாரணமாக, எரிபொருள் கருவிகளான ‘பியுவல் செல்’களில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நேரடியாக பயன்படுத்துவது முதல் வீட்டு மொட்டை மாடியில் சூரிய ஒளியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து வைக்கக்கூடிய கருவியாக பயன்படுத்துவது வரை இதன் பலன்கள் ஏராளம் என்கிறார் மெக்பர்லான்.
‘உலகின் மேற்பரப்பில் உள்ள மனிதனால் கட்டப்பட்ட கட்டுமானங்களான சாலைகள், வீடுகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றை எல்லாம் செயற்கை ஒளிச்சேர்க்கை மேற்கொள்ளக்கூடிய கருவிகளாக மாற்ற முடிந்தால் உணவு மற்றும் எரிபொருட்களை உலகம் முழுவதும் மிகவும் சுலபமாக விநியோகம் செய்துவிட முடியும்’ என்கிறார் ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தின் செயற்கை ஒளிச்சேர்க்கை நிபுணரான தாமஸ் பான்ஸ்.

No comments:
Post a Comment