நம் ஊர்களில் உள்ள தார் சாலைகள் மழைகளாலும்,
வாகனப் போக்குவரத்தினாலும் வெகுவாக பாதிக்கப்பட்டு குண்டு குழியுமாக
இருக்கும்போது அதில் மிதிவண்டி, கார் அல்லது பேருந்து இப்படி எந்த
வாகனத்தில் பயணம் செய்தாலும் சரி, ‘இனி சில நாட்களுக்கு பயணமே
செய்யக்கூடாதுடா சாமி’ என்ற உணர்வுதான் மிஞ்சும். இதை யாராவது ஒரு
புண்ணியவான் சரி செய்துகொடுத்தால் தேவலை என்று அப்போது தோன்றும்!
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வளரும் மற்றும் வளர்ந்த நாடு எதுவாயினும் அவற்றின் சாலைகள், பாலங்கள் மற்றும் இதர கட்டிடங்கள் ஆகிய பல்வேறு உள்கட்டமைப்புகளை பராமரிப்பதற்காக பெருமளவு பணமும், நேரமும் செலவாகிறது. இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண இங்கிலாந்தில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பழுதானால் தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் ஒரு அதிநவீன காங்கிரீட் பொருளை உருவாக்கி அசத்தி இருக்கிறார்கள்.
கார்டிப் பல்கலைக்கழகத்தின் ‘மெட்டீரியல்ஸ் பார் லைப்’ என்ற ஆய்வுத் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த புதிய வகை காங்கிரீட் உற்பத்திக்கான மூன்று வெவ்வேறு தொழில்நுட்பங்கள் தற்போது சோதனை செய்யப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இந்த மூன்று தொழில்நுட்பங்களையும் ஒன்றாக இணைத்து மிக மிக உறுதியான மற்றும் சாலையில் ஏற்படும் பழுதுகளை தானே கண்டறிந்து சரிசெய்துகொள்ளும் அசாத்திய திறன்கொண்ட ஒரு காங்கிரீட்டை உற்பத்தி செய்வதுதான் இவர்களின் நோக்கமாகும்.
இந்த காங்கிரீட் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட முதல் தொழில்நுட்பத்தில், சூடு படுத்தினால் முன்னரே வரையறுக்கப்பட்ட ஒரு வடிவத்துக்கு தன்னை உருமாற்றிக்கொள்ளும் விசேஷ திறன்கொண்ட பிரத்யேகமான வேதிப்பொருட்கள் கொண்ட காங்கிரீட் பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவது தொழில்நுட்பத்தில், சாலையின் குண்டு குழிகளை சரிசெய்யும் வேதிப்பொருட்கள் பல மெல்லிய குழாய்கள் வழியாக உந்தித் தள்ளப்படுவது போன்ற அமைப்பு கொண்ட காங்கிரீட் உபயோகப்படுத்தப்படுகிறது.
மூன்றாவது தொழில்நுட்பத்தில், பாக்டீரியாக்கள் கொண்ட சிறிய மாத்திரைகள் மற்றும் பழுதுகளை சரிசெய்யும் வேதிப்பொருட்கள் ஆகியவை காங்கிரீட்டில் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாக்டீரியா மாத்திரைகள் சாலையின் பழுதுகளை சரிசெய்யும் கால்சியம் கார்பனேட் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைக்கு இந்த மூன்று தொழில்நுட்பங்களுமே பரிசோதனை செய்யப்பட இருக்கின்றன. இவை வெற்றியடையும் பட்சத்தில் சாலைகளில் பழுதுகள் ஏற்படுவதை தொடர்ச்சியாக கண்காணித்து, மனித உதவி இல்லாமலேயே அவற்றை உடனுக்குடன் சரிசெய்யும் அட்டகாசமான ஒரு காங்கிரீட் உருவாகிவிடும் என்கிறார் கார்டிப் பல்கலைக்கழகத்தின் பொறியாளர் பாப் லார்க்.
அதன்பின்னர் இங்கிலாந்து மட்டுமல்லாமல் உலகமெங்கும் இந்த காங்கிரீட் கொண்ட சாலைகள் அமைக்கப்பட்டால் பாதுகாப்பான சாலைகள் கிடைப்பதோடு சாலைப் பராமரிப்புக்கான பொருட்செலவும் வெகுவாக குறையும், நாமும் நிம்மதியாக பயணம் செய்யலாம் என்பது மகிழ்ச்சியான தகவல்தான்.

No comments:
Post a Comment