2015–ம் ஆண்டின் சிறந்த அணினி கருவிகள் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 7 December 2015

2015–ம் ஆண்டின் சிறந்த அணினி கருவிகள்

 


ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டில் மூழ்கியிருக்கிறோம் நாம். ஆனால் மேலைநாடுகளில் அணிந்து கொள்ளும் எலக்ட்ரானிக் கருவிகளின் (அணினி) பயன்பாடு அதிகரித்து வருகிறது. 2015–ம் ஆண்டில் வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்ற சிறப்பான அணினி  கருவிகளை பார்ப்போம்...

தைனிக்   (Thync)    :  மற்ற அணினி கருவிகளில் இருந்து மாறுபட்டு, அணிபவரின் மனநிலையில் மாற்றத்தை உருவாக்கும் கருவியாக வெளிவந்தது தைனிக். சிறிய துண்டு ‘சிப்’ போல தோற்றமளித்த இந்த கருவியை கண் அருகே பொருத்திக் கொள்ளலாம். மெல்லிய மின்சார அலைகளை மூளைக்கு அனுப்பும் இந்தக் கருவியானது, உங்களை பரபரப்பான சூழலில் இருந்து விடுவித்து, உங்களுக்குள் அமைதியும், உற்சாகமும் ஊற்றெடுக்கச் செய்கிறது. ஆரம்பத்தில் ஆப்பிள் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் மட்டுமே இயங்கியதால் சற்று பின்னடைவை சந்தித்த இந்தக் கருவி, பிறகு ஆண்ட்ராய்டு தளத்திலும் வெளிவந்து பலரின் கவனத்தை ஈர்த்தது.

ஆப்பிள் வாட்ச் : முதல் ஸ்மார்ட்வாட்ச் கருவியாக அறிமுகமான ஆப்பிள் வாட்ச்சுகளுக்கு, அணினி கருவி சந்தையில் மிகவும் மதிப்பு காணப்படுகிறது. விலை உயர்வாக இருந்தாலும் சிறந்த மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் கொண்டிருப்பதால் நன்மதிப்பையும் பெற்றது. பல்வேறு பயனுள்ள அப்ளிகேசன்களுடன், தொடுதிரை நுட்பம், பக்கவாட்டு பொத்தான்கள், போர்ஸ் டச் நவீன தொழில்நுட்பங்கள் கொண்டிருந்த ஆப்பிள் வாட்ச்சுகள் சந்தை மதிப்பில் முன்னணியில் உள்ளன.

இதேபோல மோட்டோ 360, சாம்சங் கியர் எஸ்2, ஹவாய் வாட்ச் ஆகிய ஸ்மார்ட் வாட்ச்சுகளும் சில சிறப்பம்சங்களுடன் சந்தை மதிப்பை பெறுகின்றன.

பிட்பிட் சார்ஜ் (fitbit charge)   :
உடல் நலத்தை அளவிடும் அணினி கருவிகளில் முன்னிலை வகித்தது பிட்பிட் சார்ஜ் எச்.ஆர். கருவி. பிரேஸ்லெட் பட்டைபோல கைகளில் அணிந்து கொள்ளக்கூடிய இது நமது உடல் இயக்கத்தை கண்காணித்து இதயத்துடிப்பு உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளை, ஸ்மார்ட்போன் திரையில் காட்டக்கூடியது.

இதேபோல கைகளிலும், கால்களிலும் அணிந்து கொள்ளக்கூடிய வகையில் வெளிவந்த ஆரோக்கிய அளவீட்டுக் கருவியான மூவ் நவ்  (Moov Now)   சில சிறப்புகளுடன் சந்தை மதிப்பை பெற்றது. முப்பரிமாண சென்சார் உதவியுடன், நமது நடையின் எண்ணிக்கை, வேகம், வியர்வை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் கணித்து சில அளவீடுகளை காட்டியது. 6 மாதத்திற்கான பேட்டரி சக்தி இதன் சிறப்பம்சமாகும்.

சாம்சங்க் கியர் விஆர்: இந்த ஆண்டில் வெளிவந்த அணினி கருவிகளில் முதன்மையான இடம் பிடித்தவை, ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ வீடியோ கருவிகள்தான். இவற்றில் பலரின் எதிர்பார்ப்பை பெற்றது சாம்சங்க் கியர் வி.ஆர். எப்போதும் அணிந்து கொள்ளக் கூடிய அணினி கருவிகளுக்கு மத்தியில், பொழுதுபோக்கு அம்சத்துடன் வெளிவந்து மக்கள் மனதை ஈர்த்தன இந்த கருவிகள். அடுத்த தலைமுறையை ஆக்கிரமிக்கும் தொழில்நுட்ப கருவியாக வளர்ந்துவரும் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ கருவிகளின் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்களும் அதிக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages