தேசியக் கொடியும், தேசிய கீதமும்... - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 7 December 2015

தேசியக் கொடியும், தேசிய கீதமும்...

   பொது அறிவு பெட்டகம்

   *   இந்திய தேசியக்கொடி செவ்வக      வடிவில் மூவர்ணம் கொண்டது.

   *   3:2 என்ற விகிதத்தில் தேசியக்    கொடியின் நீளம் அகலம் இருக்க   வேண்டும்.

   *   மேல்பகுதியில் உள்ள காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தையும், வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும் பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் வளமையையும் குறிக்கிறது.

   *  சாரநாத் அசோகத் தூணின் பீடத்தில் இருப்பது போன்று தேசியக் கொடியின் மையத்தில் இருக்கும் தர்ம சக்கரம் முன்னேற்றத்தை குறிக்கும்.

*    1947–ம் ஆண்டு ஜூலை 22–ந் தேதி அரசியல் நிர்ணய சபையால் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டது.

*    இந்திய மக்கள் தங்கள் வீடுகளில் கொடியேற்றும் உரிமையை 2002–ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேசியக் கொடிச்சட்டம் வழங்குகிறது.

 *   ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் இயற்றிய ‘ஜன கன மன’ பாடலின் இந்தி வடிவம் தேசிய கீதமாக 1950–ம் ஆண்டு ஜனவரி 24–ந் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 *   ‘தத்வபோதினி பத்ரிகா’ என்ற பெயரில் தாகூர் நடத்திய பத்திரிக்கையில் ‘பாரத் விதாதா’ என்கிற தலைப்பில் 1912–ம் ஆண்டு வெளியானது தேசிய கீதம்.

 *   பதிமூன்று வரிகள் கொண்ட தேசிய கீதத்தை 52 வினாடிகளுக்குள் பாட வேண்டும்.

*    1911–ம் ஆண்டு டிசம்பர் 27–ந் தேதி கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முதல்முறையாக ‘ஜன கன மன’ பாடல் பாடப்பட்டது.

*    ‘மார்னிங் சாங் ஆப் இந்தியா’ என்ற தலைப்பில் ரவீந்திரநாத் தாகூரே தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

*    தேசிய கீதத்தில் இரு நதிகள், இரு மலைகள் மற்றும் ஏழு மாநிலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ‘திராவிட’ என்ற சொல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களையும், உத்கல் என்ற சொல் ஒரிசாவையும் குறிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages