புதுடெல்லி
- சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் செய்த சாதனையை, சுழற்பந்து
வீச்சாளர் அஸ்வின் 31 டெஸ்ட் போட்டிகளிலேயே சமன் செய்துள்ளார். தென்
ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியையும் இந்தியா வென்றது.
இத்தொடரில் அஸ்வின் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி, தொடர் நாயகன் விருதை
பெற்றார். 31வது டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள அஸ்வின் தட்டிச்செல்லும் 5வது
தொடர் நாயகன் விருது இதுவாகும். இதன் மூலம், சச்சின், சேவாக், மெக்ராத்
ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
மாஸ்டர்
பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்த
நிலையில், 5 முறை தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். அதை 31
போட்டிகளிலேயே அஸ்வின் சமன் செய்துள்ளார். பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான
பிட்சுகள் உலகமெங்கும் பெருகிவிட்ட நிலையிலும், பந்து வீச்சாளரான அஸ்வின்
இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது சிறப்பு.சேவாக், ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்
மெக்ராத் ஆகியோரும் 5 முறை தொடர் நாயகன் விருதுகளை தட்டிச்சென்றுள்ளனர்.
133
டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இலங்கை பவுலர் முரளிதரன் இப்பட்டியலில்
முதலிடத்திலுள்ளார். முரளீதரன் 11 முறை டெஸ்ட் தொடர் நாயகன் விருதை
தட்டிச்சென்றுள்ளார். தென் ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஜேக் கல்லீஸ் 9 முறை
தொடர் நாயகன் விருதையும், பாகிஸ்தானின் இம்ரான் கான், நியூசிலாந்தின்
ரிச்சர்ட் ஹாட்லி, ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே ஆகியோர் தலா 8 முறை தொடர்
நாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளனர்.
பாகிஸ்தானின்
வாசிம் அக்ரம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் சந்தர்பால் தலா 7 முறை
தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளனர். மேற்கிந்திய தீவுகளின் மால்கம்
மார்ஷல், அம்ப்ரோஸ் மற்றும் ஆஸி.யின் ஸ்டீவ் வாக் ஆகியோர் தலா 6 முறை
தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளனர்.அஸ்வின், டெண்டுல்கர், சேவாக், கிரகாம்
கூச், ஆன்ட்ரு ஸ்ட்ராஸ், மெக்ராத், மைக்கேல் கிளார்க், டேல் ஸ்டெயின்,
வக்கார் யூனிஸ் ஆகியோர் தலா 5 முறை தொடர் நாயகனாகியுள்ளனர்.
No comments:
Post a Comment