முன்பெல்லாம் ஒரு மின் சாதனம் அல்லது கருவியை பயன்படுத்த வேண்டும் என்றால்
அந்த கருவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கம்பிகள் கண்டிப்பாக இருக்கும். ஆனால்
தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க நாம் பயன்படுத்தும் கருவிகள்
அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக கம்பிகளை துறந்து தற்போது பெரும்பாலான கருவிகள்
‘ஒயர்லெஸ்’ எனப்படும் கம்பியில்லா கருவிகளாகி வருகின்றன.
உதாரணமாக, மனிதர்களின் ஆறாம் விரல் போலாகிவிட்ட வித விதமான செல்போன்களைக் கூறலாம். முக்கியமாக உலகத்தை உள்ளங்கைக்கு கொண்டுவரும் இணையமானது தொடக்கத்தில் கம்பிகள் மூலமாக பயன்படுத்தப்பட்டாலும் தற்போது ‘வைபை’ என்று அழைக்கப்படும் கம்பியில்லா தொழில்நுட்பம் மூலமாகவே பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், ‘வைபை’ தொழில்நுட்பத்தின் பயன்கள் முழுவதையும் நாம் தற்போது அனுபவிக்கிறோமா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும் என்கிறார்கள் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள். ‘வைபை’ சமிக்கைகளில் உள்ள ஆற்றலைப் பயன்படுத்தி ‘வைபை’ வலையமைப்பில் உள்ள கருவிகளை சார்ஜ் செய்யும் PoWiFi (பவர் ஓவர் வைபை) எனும் அட்டகாசமான ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள் வாஷிங்டன் பல்கலைக்கழகப் பொறியாளர்கள்.
உதாரணமாக, ஒரு ‘வைபை’ அமைப்புக்குள் இயங்கும் கேமராவிலுள்ள சென்சார்கள் மற்றும் சில கருவிகள் இயங்கத் தேவையான மின் ஆற்றலை அந்த வைபை மூலமாகவே கொடுக்க முடியும் என்பதை உலகில் முதல் முறையாக நிரூபித்துள்ளோம் என்கிறார் இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளரான மின் பொறியாளர் வம்சி தல்லா.
இந்த PoWiFi தொழில்நுட்பம் மூலம் கருவிகளுக்கு மின் ஆற்றல் கொடுப்பது மட்டுமல்லாமல் இணையத்தையும் கொடுக்கும் சக்திவாய்ந்த, முற்றிலும் புதியதொரு வைபை கருவியையும் உருவாக்கியிருக்கிறது பொறியாளர் வம்சியின் ஆய்வுக்குழு. ஆக, PoWiFi எனும் ஒரே கருவியானது அதன் வலையமைப்பில் இருக்கும் சில கருவிகளுக்கு மின் ஆற்றல் அளிப்பதோடு மட்டுமல்லாமல் இணைய வசதியைத் தரும் ‘வைபை ரவுட்டர்’ ஆகவும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
PoWiFi தொழில்நுட்பத்தில் மின்சாரமானது கம்பியில்லாமலேயே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பாய்வது சற்று ஆபத்தானது போலத் தோன்றினாலும், இம்முறை மூலம் பாயும் மிகச்சிறிய அளவு மின்சாரத்தினால் மனிதர்களுக்கு பாதிப்பு எதுவும் இருக்காது என்கிறார் வம்சி தல்லா.
மேலும் மிகவும் குறைவான மின்சாரத்தில் இயங்கும் காமிரா மற்றும் பிட்நெஸ் டிராக்கர்கள் ஆகிய சிறு கருவிகளை மட்டுமே தற்போது றிஷீகீவீதிவீ மூலம் இயக்க முடியுமாம்.
உதாரணமாக, PoWiFi–யை பயன்படுத்தி 5 மீட்டர்களுக்கு அப்பால் உள்ள ஒரு விஜிஏ காமிராவை இயக்குவது மற்றும் ஜாபோன் எனும் நிறுவன பிட்நெஸ் டிராக்கரை இரண்டரை மணி நேரத்தில் 41 சதவீதம் சார்ஜ் செய்வது ஆகிய பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது வம்சியின் ஆய்வுக்குழு.
முக்கியமாக, PoWiFiயானது மேலே கூறியுள்ள கருவிகளை சார்ஜ் செய்யும் அதே நேரம், ஆறு வீடுகளுக்கு தடையில்லாத இணைய வசதியை அளிக்கிறது என்பதும் இந்த ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment